வாக்காளர் பட்டியல் குளறுபடி: வாணியம்பாடி தாசில்தார் டிரான்ஸ்பர்
வேலூர்:
வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடிகளுக்குக் காரணமான வாணியம்பாடி தாசில்தார் இடமாற்றம்செய்யப்பட்டார். மேலும் ஒரு ஆசிரியை உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் தேதி விசாரணை நடத்திய மத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ் இத்தொகுதியில் தயாரிக்கப்பட்டவாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார்.
இதையடுத்து இத்தொகுதியில் நடைபெறவிருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. குளறுபடிகளுக்குக்காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி வாணியம்பாடி தாசில்தாரான நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாலாஜாபேட்டையில்கோட்டக் கலால் அலுவலராக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடிக்குக் காரணமான ஆசிரியை கவியரசி, மேற்பார்வையாளராக இருந்தவாணியம்பாடி நகராட்சி சர்வேயர் ராமமூர்த்தி ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டரான டாக்டர் ஆ.சி. மோகன்தாஸ் இந்த இடமாற்ற, சஸ்பெண்ட் உத்தரவுகளைப்பிறப்பித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications