இனி அதிமுகவுடன் உறவே இல்லை: இந்திய கம்யூ. உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இனி அதிமுக கூட்டணியில் சேரவே மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாற்று அணி அமைக்கக் கூடாது என்றும் மதச்சார்பற்ற அணியில் மீண்டும் வந்து சேர வேண்டும் என்றும் திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் அரசியல் என்பது கொள்கைதானே தவிர விருப்பு வெறுப்புக்கு விரோதமாக இருக்க முடியாது.

அரசியலில் எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுகவினர்மீறியுள்ளனர். எனவேதான் அக்கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்.

நாங்கள் சேர்ந்ததால்தான் அதிமுக கூட்டணி வலுவானது. கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறவும் முடிந்தது.

கடந்த 6 மாதங்களில் விலைவாசிகளை உயர்த்தினர். அதைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால்அதிமுக அரசு நாங்கள் கூறியதைக் கேட்கவில்லை.

பொடோ சட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்தது. சவப்பெட்டி ஊழல் தொடர்பாக அவர்கள் வாயேதிறக்கவில்லை.

பிரச்சனைகளின் அடிப்படையில் பாஜகவை ஆதரிப்போம் என்றும் அதிமுக கூறியுள்ளது. இது எங்களின்கொள்கைக்கு எதிரானது என்பதாலும் அக்கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்.

எனவே இனி அதிமுக கூட்டணியில் சேரவே மாட்டோம் என்றார் நல்லக்கண்ணு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+