சென்னையில் பட்டப் பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பட்டப் பகலில் ஒரு வீட்டிற்குள் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை ஒரு கும்பல்கொள்ளையடித்துச் சென்றது.

சென்னையை அடுத்த பெருங்குடியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த சங்கரன் (27)என்பவருக்கும் திருவெற்றியூரைச் சேர்ந்த பிரசன்ன லட்சுமி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம்நடந்தது.

சோழிங்கநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்பப் பணியாளராக வேலை பார்க்கும் சங்கரன், சமீபத்தில்வழக்கம்போல் அலுவலகம் சென்றுவிட்டார்.

அவருடைய கர்ப்பிணி மனைவியான பிரசன்ன லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் சங்கரனின் தூரத்து உறவினரான சரவணன் (30) உள்பட 3 பேர் அங்குவந்துள்ளனர்.

பிரசன்ன லட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தபோதே, அந்த மூவரில் ஒருவன் திடீரென்று கத்தியைக் காட்டிமிரட்டினான். வீட்டிலுள்ள நகை, பணத்தை எடுத்துத் தருமாறும் அவன் அவரை மிரட்டினான்.

ஆனால் பிரசன்ன லட்சுமி மறுத்துவிட்டார். இதையடுத்து அவருடைய கையைக் கட்டிப் போட்டு, வாயில்துணியையும் அடைத்து, அவரைக் கத்தியால் கீறியுள்ளது அந்தக் கும்பல்.

பயந்து போன பிரசன்ன லட்சுமி, உடனே தான் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து அவர்களிடம்கொடுத்துவிட்டார்.

பீரோவிலிருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல், பிரசன்ன லட்சுமிஅணிந்திருந்த தாலிச் சங்கிலி தவிர அனைத்து நகைகளையும் அவர்கள் கழற்றி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பிரசன்ன லட்சுமியை ஒரு அறையில் அடைத்துவிட்டு, அக்கும்பல் தப்பித்து ஓடிவிட்டது.

பின்னர் ஒருவழியாகக் கஷ்டப்பட்டு கட்டுக்களை அவிழ்த்த பிரசன்ன லட்சுமி, செல்போன் மூலம்உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த போலீசாரும், கைரேகை நிபுணர்களும் வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

கொள்ளைக் கும்பலில் இருந்த மற்ற இருவரும் தமிழ், விஜயன் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.இவர்களைப் பிடிப்பதற்காக 2 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

கத்திக் கீறலால் காயமடைந்த பிரசன்ன லட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+