கிருஷ்ணமூர்த்தியை நீக்கக் கோரி தேர்தல் கமிஷனுக்கு திமுக அவசர கடிதம்
சென்னை:
அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்த உத்தரவிட்ட தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு அவசர அவசரமாகதிமுக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளுக்கு தேர்தலை தள்ளிவைத்து விட்டு, ஆண்டிப்பட்டிக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த முறைகேடுகாரணமாக ஆண்டிப்பட்டியில் நேர்மையான தேர்தல் நடைபெறாது என்று தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.
ஆண்டிப்பட்டியில் தேர்தலை நிறுத்தக் கோரி முதலில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு கருணாநிதி புகார் மனுஅனுப்பினார். பிறகு திமுக எம்.பி.க்கள் குழுவும் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து தேர்தலைநிறுத்தக் கோரி வலியுறுத்தின.
அதன் பிறகும் தேர்தலை தள்ளி வைக்காததால், திமுக தலைமை ஜனாதிபதிக்கு மனு அனுப்பியது. பிறகு வேறுவழியில்லாமல் திமுக தேர்தல் வேட்பாளரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.
இதற்கிடையே ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்றுதிமுக சந்தேகப்படுகிறது. திமுக அனுப்பிய மனுக்களை பரிசீலிக்காமலேயே அவர் முடிவு எடுத்து விட்டதாகவும்கருதுகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக இப்போது தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இது குறித்து திமுக எம்.பி.க்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எந்தக் காரணங்களுக்காக இரு தொகுதி தேர்தலை தள்ளி வைக்கப்பட்டதோ, அதே புகார்கள் ஆண்டிப்பட்டியிலும்இருக்கின்றன. தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் பலர் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து, வாக்காளர்பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதை தகுந்த ஆதாரத்துடன் அவரிடம் அளித்தனர்.
ஆனால், தேர்தல் கமிஷன் பெஞ்ச் எங்களது கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. காரணம், பாரபட்சமற்ற வகையில்தனது மனதை செலுத்த தேர்தல் கமிஷனர் கிருஷ்ண மூர்த்தி தயாராக இல்லை. அவரிடம் எங்களுக்கு நீதிகிடைக்கவில்லை.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதற்கு உரிய விளக்கத்தை அவர் எங்களுக்கு தரவில்லை. எனவே,ஒரே மாதிரியான அளவுகோலை மூன்று தொகுதிகளுக்கும் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டுமாறுகேட்டுக்கொள்கிறோம்.
இல்லாவிட்டால், அரசியல் சாசனத்தின் 324(5) பிரிவின்படி தலைமை தேர்தல் கமிஷனர் தனக்குள்ள அதிகாரத்தைபயன்படுத்தி, தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை அந்த பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications