குமரியில் பிடிபட்ட வெளிநாட்டுப் பெண் உளவாளியா? - போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பிடிபட்டுள்ள ஒரு வெளிநாட்டு பெண் உளவாளியா என்பது குறித்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் நாடாளுமன்றம் தீவிரவாதிகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப்போடப்பட்டு, போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் முக்கியஇடங்களுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியிலும் போலீசார் இரவுப்பகலாக ரோந்து சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் குமரிமுனை அருகே காணிமடம் கடற்கரைப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு வெளிநாட்டுப்பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண்ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மரியா சத்தியனந்தா என்று தெரிய வந்தது.
கடந்த மாதம் 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்த மரியா, மராட்டிய மாநிலம் நாண்டிக் ரயில்நிலையத்தில் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை தவற விட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை எந்த போலீஸ் நிலையத்திலும் இது வரை அவர் புகார் கொடுக்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக இவர் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாஸ்போர்ட், விசா இல்லாமலேயேதங்கி உள்ளார். இந்தியாவில் அனுமதியில்லாமல் தங்கியிருந்ததால் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணைநடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம்ஏற்பட்டள்ளது.
அந்தப் பெண் உளவாளியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே, க்யூ பிராஞ்ச் போலீசாரும்அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications