புலிகளின் போர் நிறுத்தம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தங்களுடைய போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளனர்.
முதற்கட்டமாக கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்து ஒரு மாத காலப் போர் நிறுத்தத்திற்கு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து இலங்கை ராணுவமும் ஒரு மாத காலப் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.
இதற்கிடையே இலங்கை அரசும் நார்வே குழுவினரும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தை நார்வே குழுவினர் பலமுறை சந்தித்துப்பேசியுள்ளனர்.
அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புக்கள் படிப்படியாக அதிகரித்துள்ளன என்று நார்வே குழுவினர் நம்பிக்கைதெரிவித்தனர். ஆனால் இரு தரப்பினரும் ஏராளமான இடையூறுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும்அவர்கள் கூறினர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேலும் துரிதப் படுத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள்போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள சென்னை அல்லது பெங்களூரில் பேச்சுவார்த்தையை நடத்த அனுமதியளிக்க வேண்டும்என்று விடுதலைப் புலிகள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ராணுவமும் போர்நிறுத்த நீட்டிப்பு:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த நீட்டிப்பை வரவேற்ற இலங்கை அரசு, தாங்களும்போர்நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 24ம் தேதி வரை இந்தப் போர்நிறுத்த நீட்டிப்பு அமலில் இருக்கும் என்று இலங்கை ராணுவம்அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications