வேலூர் அருகே வேன்-லாரி மோதல்: 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
திண்டிவனம் அருகே இன்று அதிகாலை வேனும் லாரியும் மோதியதில் 13 பேர் பலியாகினர்.
இந்நிலையில் வேலூர் அருகே இதேபோல் மற்றொரு விபத்து நடந்துள்ளது.
திருமணக் கோஷ்டியை ஏற்றிக் கொண்டு வேலூரிலிருந்து சென்று கொண்டிருந்த வேனும், காய்கறிகள் ஏற்றிக்கொண்டு எதிர்த் திசையில் வந்த லாரியும் புளியந்தாங்கல் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications