கொழும்பு பயணியிடம் 2.5 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லவிருந்த பயணியிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று இச் சம்பவம் நடந்துள்ளது. பிடிபட்டவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து இப் பிரிவின் மண்டல இயக்குனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜாபர் அலி என்ற 38 வயது நபர் இரண்டரை கிலோ எடையுள்ள ஹெராயினைக் கடத்த முயன்றார். இது குறித்துஎங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து அவரை இமிக்ரேஷன் கவுண்டரிலேயே மடக்கிப் பிடித்தோம்.
அவரது ரெக்சின் பைகளை சோதனையிட்டபோது பைகளின் அடிப்பகுதியில் ஹெராயினை மறைத்துவைத்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னையைச் சேர்ந்த ஒருவர் இதை தன்னிடம் தந்துகொழும்புவுக்குக் கொண்டு செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்தார்.
இரு மாதங்களுக்கு முன் இதே போல ஹெராயினை கொழும்புவுக்குக் கடத்திச் சென்றதாகவும் கூறினார்.
70 சதவீதம் சுத்தப்படுத்தப்பட்டிருந்த அந்த ஹெராயினின் மதிப்பு சர்வதேச மார்க்கெட்டில் ரூ. 2.5 கோடியாகும்.இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரமாகிவிட்டதால், இப்போது விமானம் மூலம் போதைப் பொருளை கடத்தஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து விமான நிலையங்களிலும் இனி கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றார்ஜிவால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications