கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தகவல் மையத்தின் மீது தீவிரவாதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலைதிடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த 4 போலீசார் கொல்லப்பட்டனர்.
கொல்கத்தாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் பார்க் தெருவில் அமெரிக்கத்தகவல் மையம் உள்ளது.
சமீப காலமாக இந்த மையத்துக்கு மிக பலத்த காவல் போடப்பட்டுள்ளது. இரவில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்காலையில் காவல் பணியை மேற்கொள்ள இருந்த போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைப்பற்காக வரிசையில்நின்றிருந்தனர்.
காலை 6.30 மணிக்கு இந்தப் பணி நடந்து கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4தீவிரவாதிகள் திடீரென்று ஏ.கே.47 ரக துப்பாக்கிகளாால் போலீசார் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் 18 போலீசார் மீது குண்டுகள் பாய்ந்தன. போலீசார் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் அவர்கள் மோட்டார்சைக்கிளிலேயே தப்பியோடிவிட்டனர்.
இத் தாக்குதலில் 4 போலீசார் அந்த இடத்திலேயே இறந்தனர். 14 போலீசார் மிக பலத்த காயமடைந்தனர்.அமெரிக்க மையத்தின் பாதுகாவலர் உள்பட சில பொது மக்களும் இதில் காயமடைந்தனர். இதில் பலரது நிலைமைமிக மோசமாக உள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திடீர் தாக்குதலால் நிலை குலைந்த போலீசார் அங்குமிங்கும் ஓடினர். பலர் அங்கு நின்றிருந்த போலீஸ் வேனின்பின்னால் போய் மறைந்து கொண்டதால் உயிர் தப்பினர். கிட்டத்தட்ட 54 தோட்டக்கள் அங்கு சிதறிக் கிடந்தன.
குடியரசுத் தினத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அமெரிக்கத் தகவல் மையத்தில் தீவிரவாதிகள்நடத்திய தாக்குதல் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறையான எப்.பி.ஐயின் இயக்குநர் ராபர்ட் முல்லர் இன்று இந்தியா வந்துள்ளார். அவர்தீவிரவாதத்துக்கு எதிராக இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடனும், பிரதமர், உள்துறை அமைச்சருடனும்விவாதிக்க உள்ளார். அவரது வருகைக்கு எதிராகவும் இத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications