10 போர்க் கைதிகளை விடுதலை செய்த புலிகள்
கொழும்பு:
போரின்போது கைது செய்யப்பட்ட 10 இலங்கைக் கைதிகளை விடுதலைப் புலிகள் விடுதலை செய்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 3 பேர் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் விடுதலைப் புலிகளிடம் மாட்டிக் கொண்டனர்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த 10 போர்க் கைதிகளையும் விடுவிக்க விடுதலைப் புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்டதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வன்கூறினார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் அந்த 10 போர்க் கைதிகள் இருந்தபோது, அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டதாகஇலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இதையடுத்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யவும் பிரபாகரன்விரும்புவதாகவும் அப்பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இலங்கைப் போரில் காணாமல் போன ராணுவத்தினரின் குடும்பங்கள் இணைந்து ஒரு சங்கம் ஏற்கனவே உள்ளது.இந்தச் சங்கத்திடம் 10 போர்க் கைதிகளும் ஒப்படைக்கப்பட்டனர்.
போரின்போது காணாமல் போன நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் இன்னும் உயிருடன்இருப்பதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளிடம் கைதிகளாக இருப்பதாகவும் அவர்களுடைய குடும்பத்தினர்இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அனைவரையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி கோரிக்கை விடுத்துக்கொண்டே உள்ளனர்.
புலிகள் மீதான தடையை நீக்க புத்த மதகுரு வேண்டுகோள்:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று புத்த மதகுருகோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவிதமான முன் நிபந்தனையும் இல்லாமல் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால், அவர்கள்மீதான தடையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழர் வாழும் பகுதிகளுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்என்றும் அவர் கோரியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications