மண்ணில் புதைந்த சாலை: புதுவையில் பரபரப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அதிக வாகனங்கள் சென்றதால் முக்கிய சாலையொன்றின் ஒரு பகுதி, பாரம் தாங்காமல் பூமிக்குள்புதைந்து விட்டது.
பாண்டிச்சேரியின் முக்கிய சாலை மிஷன் சாலையாகும். இந்த சாலையில் எப்போதும் கடுமையான போக்குவரத்துஇருக்கும். அதிக அளவில் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கும்.
சமீபகாலமாக இந்த சாலையின் சில பகுதிகள் திடீரென தரைக்குள் புதைந்து வருவது சகஜமாகி விட்டது. சாலையில்அதிக அளவில் வாகனங்கள் செல்வதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும் முத்துக்குமரன் கோவில் தெருஆகியவற்றிற்கு இடையே உள்ள சாலை 3 அடி அளவுக்கு தரைக்குள் புதைந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதைந்த சாலைப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். பொதுப்பணித்துறைசெயற் பொறியாளர் ஆனந்தனே இதுகுறித்துக் கூறுகையில், கடலுக்கு அருகில் இந்த சாலை உள்ளது.
மேலும் சாலைக்குக் கீழே 1978ம் ஆண்டு போடப்பட்ட கழிவு நீர்க் குழாய் செல்கிறது. இது தற்போதுஉபயோகத்தில் இல்லை. ஆனால் குழாய் போட்டு நீண்ட காலமாவதால், அது துருப்பிடித்து மண்ணின் தன்மையைமாற்றியுள்ளது.
இதன் காரணமாக சாலையின் பலம் குறைந்துள்ளது. இதுவே சாலை புதையக் காரணம். உடனடியாக இந்தக் கழிவுநீர்க் குழாயை அகற்ற பாண்டிச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனந்தனே கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications