ஆண்டிப்பட்டியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் ஜெ.
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை (வியாழக்கிழமை)வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
ஆண்டிப்பட்டியில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயலலிதா நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர்கள் யாரும் உடன் வர வேண்டாம் என்று ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மனுத்தாக்கல் இருக்க வேண்டும் என்றும், வாகனங்களின்அணிவகுப்பும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்து முடித்தவுடன் சென்னைக்குத் திரும்புகிறார். பின்னர் பிப்ரவரி 5ம்தேதியிலுருந்து 12ம் தேதி வரை ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வைகை சேகர், மதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயச்சந்திரன்ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.
முதல்வர் ஆண்டிப்பட்டிக்கு வருகை:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்வதை முன்னிட்டு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்இன்று தேனி செல்கிறார்.
முன்னதாக இன்று காலை மதுரை சென்ற பன்னீர்செல்வம், அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு, பின்னர் கார்மூலம் தேனி செல்கிறார் பன்னீர்செல்வம்.
நாளை காலை வேட்புமனுத் தாக்கலுக்காக வரும் ஜெயலலிதாவை காலை 10.30 மணிக்கு தேனி மாவட்டஎல்லையிலேயே வரவேற்கவும் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications