எம்.ஜி.ஆர். படங்களை திரையிட அதிமுக தடை: விநியோகஸ்தர் புகார்
சேலம்:
எம்.ஜி.ஆர் நடித்த படங்களை வெளியிடும் உரிமை பெற்றிருந்தும் அதிமுக மேலிடம் அப்படங்களைத்திரையிடுவதற்கு தடை செய்வதாக சேலம் சினிமா விநியோகஸ்தர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சேலம் தேவேந்திரபுரத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ராஜமாணிக்கம். இவர் சாந்தி பிலிம்ஸ், கற்பகம்சர்க்யூட் என்ற பெயரில் திரைப்படங்களை விநியோகித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அவருடைய வளர்ப்பு மகன் அப்பு என்கிற ரவீந்திரன் எம்.ஜி.ஆர். பிலிம்ஸின் நிர்வாகஇயக்குனர் ஆனார்.
இவரிடமிருந்து கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். பிலிம்ஸின் "நாடோடிமன்னன்", "உலகம்சுற்றும் வாலிபன்", "அடிமைப் பெண்" ஆகிய 3 திரைப்படங்களின் நெகடிவ் ரைட்ஸை ரூ.27 லட்சம் கொடுத்து ஒருஒப்பந்தத்தின் மூலம் 99 ஆணடுகளுக்கு ராஜமாணிக்கம் பெற்றார்.
அப்பு மறைந்த பிறகு அவருடைய மனைவி நிர்மலா எம்.ஜி.ஆர். பிலிம்ஸின் நிர்வாக இயக்குனரானவுடன், இந்த 3படங்களின் விநியோக உரிமைக்கு மேலும் பணம் கொடுத்து ஒப்பந்தம் போடும் படி கூறியுள்ளார்.
இதனால் ராஜமாணிக்கம் 3 படங்களின் விநியோக உரிமை தனக்கு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே திருநெல்வேலி சவரிமுத்து என்பவருக்கு இந்த 3படங்களின் வெளியிடும் உரிமையை நிர்மலா கொடுத்துள்ளார்.
வழக்கின் முடிவில் 3 படங்களின் விநியோக உரிமையை ராஜமாணிக்கம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றஇடைக்காலத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தில் ராஜமாணிக்கம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அந்த 3 படங்களையும் ராஜமாணிக்கம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்ராஜபாளையத்தில் உள்ள மீனாட்சி தியேட்டரில் "அடிமைப் பெண்" படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரையிடப்பட்டது.
ஆனால் 16ம் தேதி ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏவான ராஜசேகர், நகர செயலாளர் ராஜா மற்றும் சிலர் அந்ததியேட்டருக்கு செனறு அதன் பொறுப்பாளரை மிரட்டி படச் சுருளையும், வசூலான தொகையையும் பறித்துச்சென்றனர்.
இது சம்பந்தமாக தியேட்டர் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு ராஜமாணிக்கம் கேட்டபோது அதிமுக தலைமைநிலையத்தில் இருக்கும் சேகர் என்பவர் கூறியதின் அடிப்படையில் தான் படச் சுருளையும், பணத்தையும் பறித்துச்சென்றதாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராஜமாணிக்கம் நடந்த சம்பவத்தை ஜெயலலிதாவிற்கு பேக்ஸ் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.மேலும், அதன் நகல்களை உள்துறை இயக்குனருக்கும், விருதுநகர் மாவட்ட எஸ்.பிக்கும் அனுப்பியுள்ளார்.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications