சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தீவிரப் பாதுகாப்பு
சென்னை:
கொல்கத்தாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளதையடுத்து சென்னையில் இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட்அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு 24 மணிநேரப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்துஇந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வருகிற 25ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கலந்து கொள்ளும் 3வது ஒருநாள்சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதையடுத்து சென்னை நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளஎம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 3000 போலீஸார் கொண்ட படை பாதுகாப்பில் ஈடுபடவுள்ளது.
மேலும், போட்டி முடியும் வரை 24 மணி நேர பாதுகாப்புக்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டி நடக்கும் தினத்தில் ஸ்டேடியத்திற்குள் வெடிகள், பேனர்கள், டப்பாக்கள், இசைக் கருவிகள்,சிகரட் லைட்டர்கள், செல் போன்கள், தீப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளிலும் போலீசார் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளனர். பகல்-இரவுப்போட்டியாக இந்த கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது.
இதேபோல, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வழக்கத்தை விட கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர தூதரகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications