சென்னையில் நாளை ஒருநாள் கிரிக்கெட்: தீவிர பாதுகாப்பு
சென்னை:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே நாளை (வெள்ளிக்கிழமை) 3வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்போட்டி நடைபெறவுள்ளதையடுத்து, சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் தாஜ் கோரமண்டல்ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துசென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பு பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளதாக தமிழக கிரிக்கெட் சங்கச் செயலாளர் அஷோக் கும்பட் கூறினார்.
பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரையும், பின்னர் மாலை 6.45 மணிக்குத் தொடங்கி இரவு 10.15 மணி வரையும் நடக்கும்.
ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் நாளை பகல் 12 மணியிலிருந்துதான் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கடந்த வாரம் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்த ஸ்டேடியத்தில்மொத்தம் 46,000 இருக்கைகள் உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான டி.வி. திரை ஒன்று புதிதாகஅமைக்கப்பட்டுள்ளது. போட்டியின் முக்கியக் காட்சிகள் இந்த திரை மூலம் ரசிகர்களுக்காகக் காண்பிக்கப்படும்.
இதைத் தவிர நூற்றுக்கணக்கான டெலிவிஷன் பெட்டிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 போட்டிகளிலும் இந்திய-இங்கிலாந்து அணியினர் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications