ஜெ.வை எதிர்த்து கிருஷ்ணசாமி மனுத் தாக்கல்
ஆண்டிப்பட்டி:
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று பிற்பகலில்வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் வைகை சேகரும், மதிமுக சார்பில் ஜெயச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.இவர்கள் நேற்றே வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டனர். இவர்கள் இருவரும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து தலித் கட்சியான புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமியும்போட்டியிடுகிறார். அவர் இன்று மாலையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்தத் தொகுதியில் தலித் மக்களும் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுக்களை கிருஷ்ணசாமி குறிவைப்பார்.
மாஞ்சோலைத் தொழிலாளி கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமிஇப்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ஆண்டிப்பட்டியில் போட்டியிடவும் இதற்காக வேட்பு மனுத் தாக்கல்செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அனுமதி வாங்கியுள்ளார்.
இன்று மாலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அங்கி தங்கியிருந்து பிரச்சாரம் செய்யவும் அவருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இன்று ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது தேனி நகரமே அமளிதுமளிப்பட்டது. பாதுகாப்புஎன்ற பெயரில் மதுரை-தேனி இடையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால்,மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசு இந்திரமும் அதிகாரிகாரிகளும் முறைகேடான வகையில்பயன்படுத்தப்பட்டு வருவதாக அனைத்து எதிர் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.
ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் 18,000 போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாகக் கூறிஇந்தத் தேர்தலை காங்கிரஸ், த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவைபுறக்கணித்துள்ளன.
சமீப காலத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆனால், ஜெயலலிதாவை எதிர்த்து நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் தான் இக் கட்சிகள் தேர்தலைப்புறக்கணிப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications