காங்கிரசில் இணைந்தார் வாழப்பாடி
டெல்லி:
தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா ஆகியோர் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அக்கட்சியில் இணைந்தார் வாழப்பாடி.
அவருடன் தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் காங்கிரசில் இணைந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் வாழப்பாடி பேசியதாவது:
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அரியணையைக் கைப்பற்றுவதற்கான முதல் முயற்சியாகத்தான் நான்மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளேன்.
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்னைப் போலவே மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பி வந்துகட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
வட மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தலுக்குப் பிறகு அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமடையும்வகையில் தமிழகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
அப்போது சோனியா காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார்வாழப்பாடி.
இன்று மகிழ்ச்சிகரமான நாள்: இளங்கோவன்
பின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் இன்று ஒரு மகிழ்ச்சிகரமான நாள்என்றார்.
தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது என்ற இளங்கோவன், தமிழகத்தில் விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சோனியாகாந்தி முன்னிலையில் நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டோம் என்றும் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications