ஆப்கானிஸ்தானுக்கு புதிய இந்திய தூதுர்
டெல்லி:
ஆப்கானிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதராக விவேக் கத்ஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் நடவடிக்கையினால் தலிபான்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கர்சாய் தலைமையிலானஇடைக்கால அரசு உருவாகியுள்ளது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளையும் அளித்துக் கொண்டுவருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே எஸ்.கே. லம்பா சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதரை மத்திய அரசு நேற்று நியமித்தது. தற்போது மியான்மர் நாட்டுஇந்தியத் தூதரான விவேக் கத்ஜூ, இனி ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதராகச் செயல்படுவார். இவர்விரைவில் ஆப்கானிஸ்தான் சென்று தன்னுடைய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டு ஐ.எப்.எஸ். பயிற்சி பெற்ற விவேக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியநாடுகளின் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்டபோது,பயணிகளை மீட்க தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய தூதுக்குழுவின் தலைவராக விவேக்இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications