முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு சுவாமி கண்டனம்
மதுரை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறது என்று ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்திக் கட்டும் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ள உச்சநீதிமன்றத்திற்குப் பதிலளிக்க 3 வாரம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் தேவையில்லாமல் தமிழக அரசு காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின்தெற்கே உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகளில் தமிழக அரசு தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாகவிரைந்து செயல்பட வேண்டும்.
ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக அதிகரிக்க மத்திய நீர்வள கமிஷன்ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி இந்த அணையின் உயரத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்துமேற்கொள்ள வேண்டும்.
போலீஸ் சங்கம் அமைக்கும் விஷயத்திலும் தமிழக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. சட்டசபைத்தேர்தலுக்கு முன் ஒரு மாதிரியும் இப்போது பதவிக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் அதிமுக பேசி வருகிறது என்றார்சுவாமி.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இன்னும் எங்கள் கட்சி முடிவு செய்யவில்லை என்றும்சுவாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications