தமிழகத்தில் ஊடுருவிய 15 பாகிஸ்தான் தீவிரவாதிகள்
சென்னை:
தமிழகத்தில் 15 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்றிரவு விடிய, விடிய தேடுதல்வேட்டை நடத்தினர். தொடர்ந்து இந்த தேடுதல் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் 15 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், அதில் ஒரு தீவிரவாதி வேலூர் மாவட்டத்திற்குவந்திருப்பதாகவும், மத்திய புலனாய்வுத்துறை மூலம் தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சென்னை ஐ.ஜி. உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களிலும், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை செய்துவருகின்றனர்.
தமிழகத்தில் நுழைந்து வெளியில் தெரிந்துவிட்டதால் இந்தத் தீவிரவாதிகள் பெங்களூருக்குத் தப்பிச் செல்லவும்வாய்ப்புள்ளதால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தியும் போலீசார்சோதனைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு 10 முதல் 11 மணி வரை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலும், பிறகு ஏலகிரி மலைக்குச் சென்றுஅங்குள்ள லாட்ஜ்களில் வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் சோதனை நடத்தினார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications