திண்டுக்கல், நெல்லையில் பஸ்களை எரித்த 5 பேர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் சமீபத்தில் பஸ்களை எரித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லிலிருந்து செந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த டவுண் பஸ்சை ஒருகும்பல் வழிமறித்து, தீவைத்துவிட்டுச் சென்றனர்.
இதனால் அந்த பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீவைத்த கும்பலைத் தேடுவதற்காக தனிப் போலீஸ் படைஅமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்று கொண்டிருந்த ஒரு மாருதிகாரை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்தக் காரில் வந்த 3 பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள்தான் திண்டுக்கல் பஸ்சை எரித்தவர்கள்என்பது தெரிய வந்தது.
தங்கள் தலைவரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனைக் கைது செய்ததன்காரணமாகத்தான் தாங்கள் பஸ்சை எரித்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை பஸ்சை எரித்த 2 பேர் கைது:
இதே போல் நெல்லை அருகே பஸ்சை எரித்த 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் தொடர்புடைய மேலும் பலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications