அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் பிரதமர்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தான் இடைக்காலப் பிரதமரான ஹமீது கர்சாய், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அமெரிக்கா சென்றுசேர்ந்தார்.
அவர் முதலில் விர்ஜினியாவில் உள்ள மசூதியில் அமெரிக்க-ஆப்கானிஸ்தான் கம்யூனிட்டி உறுப்பினர்களைகர்சாய் சந்தித்து பேசுகிறார். அங்கு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கல்வி வழங்குவது பற்றியும் அவர்உரையாற்றுகிறார்.
பிறகு அவர் புஷ்ஷை சந்தித்து பேச உள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அமெரிக்கா குண்டுவீசிவருவதை நிறுத்துமாறு கர்சாய் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
மேலும் அமெரிக்க குண்டு வீச்சால் ஆப்கன் பொதுமக்கள் பலர் இறந்துள்ளதையும் எடுத்துக் கூறி படைகளைவிலக்கிக் கொள்வதற்காகக் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது.
கர்சாய் அமெரிக்கா கிளம்புவதற்கு முன்னதாக காபூல் ரேடியோவில் அவர் பேசியதாவது:
ஆப்கனில் அமைதியும், பாதுகாப்பும் மிகவும் முக்கியம். உலகநாடுகள் கொடுத்துள்ள 4.5 பில்லியன் டாலர்களைநாம் சரியான திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஆப்கானிஸ்தானை சீரமைப்பதில் மக்கள் தியாகமனப்பான்மையுடனும், உண்மையாகவும் பங்கு கொள்ளவேண்டும் என்று கர்சாய் கூறினார்.
காந்தஹார் மருத்துவமனை மீது அமெரிக்கப் படை தாக்குதல்:
காந்தஹாரில் மீர்வைஸ் மருத்துவமனையில் ஆயுதங்களுடன் அல்-கொய்தா தீவிரவாதிகள் மறைந்திருப்பதால்,அமெரிக்கப் படையினர் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.
மருத்துவமனையிலிருந்து வெடிச் சத்தம் கேட்டதாக நேற்று ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமருத்துவமனைக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்களும்,ஆப்கானிஸ்தான் வீரர்களும் அந்த சாலைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இது பற்றி பென்டகன் அதிகாரிகள் உறுதியாக எதுவும் கூற மறுத்து விட்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications