ஸ்டிரைக் அறிவித்துள்ள அரசு ஊழியர்களுடன் இன்று பேசுகிறது அரசு
சென்னை:
வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று (திங்கள்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பிப்ரவரி 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் செய்யப் போவதாக பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து அந்த சங்கங்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அரசு அழைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம், அடிப்படைப்பணியாளர்கள் சங்கம், சி மற்றும் டி கிரேட் ஊழியர்கள் சங்கம், ஓட்டுநர் சங்கம் ஆகியவை பேச்சுவார்த்தைக்குஅழைக்கப்பட்டுள்ள சங்கங்கள் ஆகும்.
இருப்பினும் போராட்டக் கூட்டுக் குழுவான தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் அரசுஊழியர் சங்கம் (ஜாக்டியோ-ஜியோ) ஆகியவற்றை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை.
தங்களைக் கலந்து பேசாமல் எந்த உடன்பாடு ஏற்பட்டாலும் அதை ஏற்க மாட்டோம். வரும் பிப்ரவரி 7ம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி தொடங்கும் என்று ஜாக்டியோ-ஜியோ கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications