கொல்கத்தாவில் வெடிகுண்டு புரளி: பீதியில் மக்கள்
கொல்கத்தா:
வெடிகுண்டு புரளி காரணமாக கொல்கத்தா நகரமே இன்று (செவ்வாய்க்கிழமை) பீதியில் உறைந்து போனது.
காலையில் பரபரப்பாக அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில்வெடிகுண்டுப் புரளி கிளம்பியது.
ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு 100 அடி தொலைவில் அநாதையாக நடு ரோட்டில் ஒரு பேக் கிடந்தது.இதைக் கண்ட அந்த வழியில் போவோர்-வருவோர் பீதியுடன் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார், அந்த பேக்கை சோதனையிட்டபோது, அதில் ஒன்றும்இல்லை என்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே பல முக்கியமான அலுவலகங்கள் அமைந்துள்ள ஹிந்துஸ்தான்பில்டிங்குக்கு ஒரு அனாமதேய டெலிபோன் அழைப்பு வந்தது.
அந்தக் கட்டடத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு, ரிசீவரை வைத்துவிட்டான் டெலிபோன்செய்தவன்.
நகரின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்தக் கட்டடமே பரபரப்புக்குள்ளானது. ஆனால் வெடிகுண்டுநிபுணர்கள் வந்து சோதனை செய்து பார்த்தபோது, அங்கு எந்த குண்டும் அகப்படவில்லை.
இதேபோல் சிலிகுரி நகரிலும் வெடிகுண்டு புரளி கிளம்பி மக்களைப் பீதியடையச் செய்தது. புர்த்வான் ரோட்டில்"டைம் பாம்" என்று எழுதப்பட்ட ஒரு பையைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பையினுள் காணப்பட்ட சில வயர்களைக் கண்டு அதிர்ந்தனர்.பின்னர் அந்த வயர்களைத் துண்டித்து விட்டு, பையைத் திறந்து பார்த்தபோது, அதில் சில வாசனைத்திரவியங்களும் வயர்களும் மட்டும் இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அசாம் மாநில இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். அவனைவிசாரித்தபோது, மக்களிடையே பீதியைக் கிளப்ப வேண்டும் என்றே தான் இந்தப் பையை நடு ரோட்டில்போட்டதாக ஒப்புக் கொண்டான்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications