"பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கேட்பதா?" - முஷாரப் ஆவேசம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கூறியதற்கு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசினாலும் காஷ்மீர் பிரச்சனையைத்தான் பாகிஸ்தான் முன்னால் வைக்கிறது.எனவே முதலில் தான் ஆக்கிரமித்துள்ள 3ல் 1 பங்கு காஷ்மீரை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கட்டும்.அதன் பிறகு பேச்சுவார்த்தை பற்றி யோசிக்கலாம் என்றும் வாஜ்பாய் நேற்று ராஞ்சியில் நடந்த ஒருபொதுக்கூட்டத்தில் பேசினார்.
வாஜ்பாயின் இந்தப் பேச்சுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லையில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எவ்வளவோ முயன்று வருகிறோம். ஆனால் எங்கள்கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளாமல் தேவையில்லாமல் பேசி வருவதை நாங்கள் வன்மையாகக்கண்டிக்கிறோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இப்போதுள்ள சூழ்நிலையில் போர் வருவதும் வராததும் இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று பாகிஸ்தான்வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது ஆசிஸ் கான் தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டின்போது வாஜ்பாயிடம் முஷாரப் நட்புக் கரம் நீட்டியதையும், இந்தியாவுக்கு அவர் குடியரசு தினவாழ்த்துச் செய்தி அனுப்பியதையும் சுட்டிக்காட்டிய கான், இந்தியாவுடன் எப்போதும் நட்புடன் இருப்பதையேநாங்கள் விரும்புகிறோம் என்றார்.
ஆனால் பாகிஸ்தான் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். அனைத்துப் பிரச்சனைகளும் அமைதியானமுறையில் தீர்க்கப்படும் என்று வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதைத்தான் நாங்கள் பாகிஸ்தானுக்கு மீண்டும்மீண்டும் கூறிக் கொண்டே இருக்கிறோம் என்றும் வாஜ்பாய் கூறினார்.
கொல்கத்தா தாக்குதல் குறித்து பாக்.:
இந்நிலையில் கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தாக்குதல் தொடர்பாக 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள்கொல்லப்பட்டதை "நல்ல ஜோக்" என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா தாக்குதல் தொடர்பாக 5 வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ளதாகமுதலில் கூறிய இந்தியா, இப்போது திடீரென்று 2 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களைப் பாகிஸ்தானியர்கள்என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அந்நாட்டு தகவல் தொடர்பு செயலாளரான அன்வர் மேஹ்மூத்கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications