பாக். தீவிரவாதிகள் கடத்திய அமெரிக்க நிருபர் எங்கே?
வாஷிங்டன்:
கராச்சியில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரை விடுவிக்க உதவுமாறுபாகிஸ்தானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது டேனியலைப் பணயக் கைதியாக வைத்துள்ள தீவிரவாதிகள், அவரது தலைமீது ஒருவர் துப்பாக்கியைவைத்து அழுத்துவது போன்ற ஒரு புகைப்படத்தை இ-மெயில் மூலம் "வால் ஸ்ட்ரீட்" பத்திரிக்கைக்குஅனுப்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தலிபான்கள் மற்றும் அல்-காய்தாவினரை மனிதாபிமானமில்லாமல் அமெரிக்கா நடத்திவருகின்றனர். அவர்களை ஒழுங்காக நடத்தினால், நாங்களும் டேனியலை மரியாதையாக நடத்துவோம் என்றும்அந்த இ-மெயிலில் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
"பாகிஸ்தான் கெளரவத்தை மீட்கும் தேசிய இயக்கம்" என்று தீவிரவாதிகள் தங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கியூபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலிபான்கள், அல்-காய்தாவினர் மற்றும் பாகிஸ்தானியர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் அமெரிக்க ராணுவத்தால் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரான அப்துல் சலாம்சயீப்பை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அத்தீவிரவாதிகள் கோரியுள்ளனர்.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏயின் ஏஜென்டாகத்தான் டேனியல் செயல்படுகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடத்தப்பட்ட நிருபரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக முஷாரப்பும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டேனியலைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக, அமெரிக்க பெடரல்போலீசார் இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனாலும் டேனியல் எங்கே இருக்கிறார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை என்று பாகிஸ்தான் போலீசார்தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications