எல்லையில் படைகள் வாபஸ் இல்லை: வாஜ்பாய் உறுதி
டெல்லி:
எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தை வாபஸ் பெறப் போவதில்லை என்று பிரதமர் அடல் பிஹாரிவாஜ்பாய் மீண்டும் தெளிவுபடக் கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெறும் பேச்சளவில் மட்டுமே கூறியுள்ள பாகிஸ்தான், அதைமுதலில் செயலில் காட்டட்டும் என்று கூறிய வாஜ்பாய், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே பாரிசில் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பிரஜேஷ் மிஸ்ரா,தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகள் உறுதியாக-வெளிப்படையாகத் தெரியஆரம்பித்தால் இந்தியாவும் எல்லையில் படைகளை வாபஸ் பெறத் தொடங்கும் என்றார்.
எல்லையில் முஷாரப்:
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் எல்லைப் பகுதியில் உள்ள தன்னுடைய ராணுவப் படைகளைநேரில் சென்று பார்வையிட்டார்.
எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்களையும் மற்ற வீரர்களையும் சந்தித்துதற்போதைய நிலைமை குறித்து விசாரித்தார் முஷாரப்.












Click it and Unblock the Notifications