வீரப்பன் சுற்றி வளைப்பா?
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை சரண் அடைய விடாமல் போலீஸாரே பிடிக்கும் வகையில் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகதெரிகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படைப் போலீஸார் முற்றுகையிட்டுள்ளதாகவும், நெருக்கடி காரணமாக சரண் அடையத் தயார் என்றுவீரப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வீரப்பனின் நெருங்கிய உறவினர் மூலமாக அவனது மறைவிடத்தை அதிரடிப் படை கண்டுபிடித்தது. ஆனால், அவன் தப்பிவிட்டான்.தன்னை அதிரடிப் படை நெருங்கிவிட்டதால் தான எந்த நேரமும் பிடிபடலாம் என்ற பயத்தில் வீரப்பன் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதையடுத்துத் தான் சரணடையத் தயாராக இருப்பதாக வீரப்பன் தகவல் சொல்லி அனுப்பியுள்ளான்.
ஆனால் வீரப்பன் சரண் அடைவதை தமிழக அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்று வந்தமுன்னாள் அதிரடிப்படைத் தலைவரும், சென்னை நகர போலீஸ் கமிஷனருமான விஜயக்குமாரின் பேச்சிலிருந்து இது தெரியவந்துள்ளது.அவனை சுற்றி வளைத்துப் பிடிப்பதில் தான் அரசு உறுதியாக உள்ளது.
பிடிபட்ட வீரப்பனின் உறவினரிடம் விசாரணை நடத்திவிட்டு அவன் கொடுத்த தகவல்களை வைத்து அதிரடிப் படைக்கு புதிய வியூகம்அமைத்துத் தந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார் விஜயகுமார்.
வீரப்பன் சரணடைய முன்வந்தாலும் கூட அதை அனுமதிக்காது, அதிரடிப்படை போலீஸார் மூலம் வீரப்பனைப் பிடிக்கவே தமிழக அரசுவிரும்புகிறது. இதன் காரணமாகவே தூதுவராக காட்டுக்குச் செல்லத் தயார் என்று சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்று கூறிய கொளத்தூர்மணியின் உதவியை அதிரடிப்படை நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது.
வீரப்பன் சரண் அடைந்தால் அதனால் பல்வேறு சட்டச் சிக்கல்கள் அரசுக்கு ஏற்படும். சில உறுதிமொழிகளைக் கொடுக்க நேரிடும். அவனைஆதரிக்க பா.ம.க. போன்ற கட்சிகள் தயாராக உள்ள நிலையில் வீரப்பனுக்கு எந்த உறுதிமொழியும் தர அரசு தயாராக இல்லை.
உறுதிமொழி கொடுத்தால் அது வீரப்பனுக்குத் தான் சாதகமாக அமையும். ஆனால் இதுவரை வீரப்பனால் உயிரிழந்த போலீஸார்,அவர்களது குடும்பத்தினருக்கு அது பெரும் மன வருத்தத்தைத் தரும் என்பதால் வீரப்பனைப் பிடிப்பதே சரியானது என்ற கருத்தில்அதிரடிப்படை போலீஸாருக்கு வழிகாட்டியாக இருந்து வரும் முன்னாள் டிஜிபி தேவாரம் கருதுவதாக தெரிகிறது. அவரது கருத்துக்குதமிழக அரசும் செவி சாய்த்துள்ளது.
எனவே வீரப்பனை எப்படியும் பிடித்தேத் தீருவது என்ற உறுதியில் தமிழக அதிரடிப்படை ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு உதவியாககர்நாடக அதிரடிப்படையைச் சேர்ந்த 300 வீரர்களும் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வீரப்பன் தனது குழுவினருடன் மாதேஸ்வரன் மலையில் பதுங்கியிருப்பாகத் தெரிகிறது. எனவே அந்த மலைப் பகுதியிலிருந்துவீரப்பன் தப்பி விடாதபடி நாலாபக்கம் அதிரடிப்படை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அவனுக்கு வெளியிலிருந்து உணவுப்பொருட்கள் வருவது முழுமையாகத் தடைபட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications