சென்னை சுவர்களில் போஸ்டர் ஒட்டினால் 3 மாதம் சிறை
சென்னை:
சென்னை நகரில் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மாநகர காவல்துறைஅறிவித்துள்ளது.
சென்னை நகரில் முன்பு பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவது, விளம்பரம் எழுதுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் நாளடைவில் அது சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. தற்போது ஒரு சுவர் பாக்கி விடாமல் போஸ்டர்களால்மூடப்பட்டுள்ளன. இதனால் நகரமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ள விஜயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாகபொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
மீறி ஒட்டினால் 3 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில்,
1991ம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் வரம்பின்றி போஸ்டர்கள் ஒட்டுதல், விளம்பரம் செய்தல்ஆகியவற்றிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பொது இடங்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்கள், மின் கம்பங்கள், சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது சட்டப்படிகுற்றமாகும். மீறி ஒட்டுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
வன்முறையைத் தூண்டும் வகையில் விளம்பரம் செய்வது, காவல்துறையினரை தங்கள் பக்கம் இழுக்கும் விதத்தில் வாசகங்கள்எழுதுவது, ஆபாச விளம்பரங்கள் செய்வது, மத விரோத வார்த்தைகளை விளம்பரங்களாக பிரயோகிப்பது ஆகியவையும் இந்ததீர்ப்பின் கீழ் குற்றமாக கருதப்படும்.
எனவே பொது இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக போஸ்டர்கள் ஒட்டினால், விளம்பரம் செய்தால் அவர்களுக்கு ரூ. 250அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும்.
சட்டவிரோத விளம்பரங்களைச் செய்தால் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications