ஜெயலலிதாவுக்கு ஈ-மெயில் கொலை மிரட்டல்:2 வாலிபர்கள் கைது- 40 பேரிடம் விசாரணை
நாகர்கோவில்:
ஜெயலிதாவுக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக நாகர்கோவிலில் 40 பேரிடம் போலீசார் விசாரணைநடத்தியுள்ளனர்.
இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிய 2 வாலிபர்களை காவலில் வைத்துள்ளனர். அவர்களிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு புதுவையில் இருந்து ஒரு கொலை மிரட்டல் ஈ-மெயில் வந்தது. தமிழகபுரட்சிப் படை என்ற பெயரில் இந்த மிரட்டல் வந்தது. ஆனால், அது தொடர்பாக முழு விசாரணை நடத்தியும்அப்போது யாரும் கைது செய்யப்படவில்லை.
அதே போல சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு மிரட்டல் மெயில் வந்தது. அதில் ஜெயலலிதாவையும்,கல்வியமைச்சர் தம்பிதுரையையும் வரும் 28ம் தேதிக்குள் கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மெயில் நாகர்கோவிலில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.உடனயாடியாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ககனதீப்சிங் பேடியும் போலீசாரும் விசாரணை நடத்தினர்.இதில் நாகர்கோவிலில் 2 பிரெளசிங் சென்டர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த இரு சென்டர்களும் மூடப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் ஒரு சென்டருக்கு சீல்வைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு கம்யூட்டர்களும் பறிமுதல்செய்யப்பட்டுவிட்டன.
இந்த சென்டர்களில் ப்ரெளசிங் செய்ய வந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதில் 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர்களை போலீசார் தங்கள் காவலில் வைத்துவிசாரித்து வருகின்றனர். மேலும் பல ப்ரெளசிங் சென்டர்களிலும் விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications