காஷ்மீர்: மசூதிக்குள் புகுந்த 2 தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

நகர்:

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் ஒரு மசூதிக்குள் புகுந்ததையடுத்து அதை ராணுவத்தினர் சுற்றி வளைத்ள்ளனர்.

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோபூர் நகரில் டார்ஸூ கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து தீவிரவாதிகள் தப்பிச் செல்லாதவாறு கிராமத்தின் அநைத்து வழிகளையும் போலீசாரும்,ராணுவத்தினரும் மூடி விட்டனர். அதன்பிறகு வீடு வீடாகச் சென்று சோதனையிட்டனர்.

இதனால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாத 2 தீவிரவாதிகள் மசூதிக்குள் புகுந்தனர். தீவிரவாதிகளை சரணடையக்கூறுமாறு கிராம மக்களை ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், தீவிரவாதிகள் சரணடைய மறுத்துவிட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் 2 முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், மசூதியில் ஒளிந்துள்ளதீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததா என்பது பற்றி தகவல்கள்தெரியவில்லை.

கடந்த ஒரு மாதத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+