கண்ணகி சிலை: உணர்ச்சிமிக்க தமிழர்களுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
யார் யாரெல்லாம் உணர்ச்சிமிக்க தமிழர்களோ, யார் யாரெல்லாம் தனது அம்மா, அப்பாவை தமிழில்அழைக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் கண்ணகி சிலை நிறுவும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மணவழகர் மன்றத்தின் 45வது முத்தமிழ் ஆண்டு விழா சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது.மணவழகர் மன்ற காப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட கருணாநிதிபேசும்போது கூறியதாவது:
தமிழ் இனம் இன்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முடியாத அவல நிலையில் உள்ளது. தமிழ்கலாச்சாரத்தை அழிப்பதற்கான போராட்டம் தற்போது தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று தான் கண்ணகி சிலை அகற்றம். அந்த சிலை இப்போது எங்கு உள்ளது? போக்குவரத்து இடைஞ்சல்,மழை வரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லி வருகின்றனர்.
கண்ணகி சிலை அருங்காட்சியத்தில் உள்ளதாக சொல்கின்றனர். அது அங்குள்ளதா அல்லது தோட்டத்துபடிக்கல்லாக உள்ளதா என்று தெரியவில்லை. கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவ போராட வேண்டும்.
யார் யாரெல்லாம் உணர்ச்சிமிக்க தமிழர்களோ, யார் யாரெல்லாம் தனது அப்பா, அம்மாவை தமிழில்அழைக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் கண்ணகி சிலை நிறுவும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
கண்ணகி சிலை அமைக்க உங்கள் அனைவரோடும் கலந்து பேசி நாள் குறிக்கப்படும் என்று கருணாநிதி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications