விவசாயிகளை அலட்சியம் செய்யும் பன்னீர்: இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை:
மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறாமல், முதல்வர்பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருப்பது நல்லதல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருச்சி மாவட்டங்களிலும், காவிரிடெல்டா பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தில் பயிர்கள்மூழ்கியுள்ளதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறாமல்முதல்வர் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்துக்கு சென்றிருப்பது நல்லதல்ல.
உடனடியாக முதல்வர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்என்று இளங்கோவன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுகவும் கோரிக்கை
இதுகுறித்து இன்று திமுக விவசாய அணித் தலைவர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் அமைச்சர்கள் எல்லோரும் பிரச்சாரத்துக்குஆண்டிப்பட்டிச் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது.
அறுவடை முடிந்து காத்திருக்கும் நெல்லை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ராமலிங்கம்தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications