"அம்மாவை முதல்வராக அனுப்புங்கள்": ஆண்டிப்பட்டியில் பன்னீர் பிரசாரம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி மக்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களை முதல்வராக தேர்வு செய்து சென்னைகோட்டைக்கு அனுப்புங்கள் என்று முதல்வர் பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்தார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பன்னீர்செல்வம் பிரசாரம்செய்கிறார். இதற்காக ஆண்டிப்பட்டி தொகுதிக்கு அவர் சென்றுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அம்பேத்கர் நகர் பகுதியில் அவர் பிரசாரத்தைத் தொடங்கினார். தன்னுடையபிரச்சாரத்தில் பன்னீர் கூறியதாவது:
ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்யும் பாக்கியம் ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்குக் கிடைத்துள்ளது.அதை ஆண்டிப்பட்டி மக்கள் தவற விடமாட்டார்கள்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் உச்சகட்டமான நிலையை அடைந்தது.ஆனால் கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலோ மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. ஏழை, எளிய மக்களின்நலனுக்காக கருணாநிதி அரசு எதையுமே செய்யவில்லை.
அதிமுகவையும், ஜெயலலிதாவையும் ஒழிப்பதிலேயே கருணாநிதி ஆர்வம் காட்டினார். பொய்யான வழக்குகளைப்போட்டு இப்போது முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நிற்கிறார்.
கருணாநிதியின் சதி காரணமாகவே கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியவில்லை.அவர் போட்டியிட்டிருந்தால் இந்த இடைத் தேர்தலே வந்திருக்காது. இருப்பினும், முன்பை விட அதிசுத்தமாகஆண்டிப்பட்டிக்கு ஜெயலலிதா திரும்பி வந்துள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை முதல்வராக தேர்வு செய்தது ஆண்டிப்பட்டி. இப்போதும் புரட்சித் தலைவன்வாரிசான புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களை முதல்வராக தேர்வு செய்து கோட்டைக்குஅனுப்புங்கள் என்று பிரச்சாரம் செய்தார் பன்னீர்செல்வம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications