ராமர் கோவில் விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் அசோக் சிங்கால் ஆலோசனை
காஞ்சிபுரம்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.எச்.பி.) தலைவரான அசோக்சிங்கால் இன்று (புதன்கிழமை) காஞ்சி சுவாமிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வரும் மார்ச் 12ம் தேதியன்று எப்படியும் ராமர் கோவிலைக் கட்ட ஆரம்பித்து விடுவோம் என்று வி.எச்.பியினர் கூறிவருகின்றனர்.
ஆனால் பாஜகவினர் இதற்குத் தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருவதோடு நில்லாமல், சர்ச்சைக்கு அப்பாற்பட்டநிலத்தை வி.எச்.பியிடம் தருவதற்கு மறுத்தும் வருகின்றனர்.
இதற்கிடையே நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் வி.எச்.பியினர்ஆலோசனை நடத்தி, ஆதரவையும் கோரி வருகின்றனர்.
அதன்படி இன்று காஞ்சிபுரம் வந்த அசோக் சிங்கால் மடத்திற்குச் சென்று ஜெயேந்திர சுவாமிகள் மற்றும்விஜயேந்திர சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ராமர் கோவில் கட்டுவது தொடர்பாகத்தான் சுவாமிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
சமீபத்தில்தான் திடீரென்று இங்கு வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், காஞ்சி சுவாமிகளைச்சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றார். ராமர் கோவில் விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாயின் தூதுவராகத்தான்பெர்னாண்டஸ் வந்தார் என்றும் கூறப்பட்டது.
ராமர் கோவில் கட்ட ஜெ. ஆதரவு:
இதற்கிடையே ராமர் கோவில் கட்டுவதற்கு அதிமு பொதுச் செயலாளரான ஜெயலலிதா தன்னுடைய ஆதரவைத்தெரிவித்துள்ளதாக வி.எச்.பியின் துணைத் தலைவரான ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சம்மதிக்க வைப்பேன் என்று ஜெயலலிதாகூறியதாகவும் கிஷோர் இன்று சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications