For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க நிருபர் கடத்தலில் ஜெய்ஷ் தலைவன்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

கராச்சியில் அமெரிக்க நிருபரான டேனியல் பேர்ல் கடத்தப்பட்டதில் ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாதஅமைப்பின் ஒரு தலைவனான ஷேக் ஒமருக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

டேனியலுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு வந்த 3 பேரை நேற்று(திங்கள்கிழமை) இரவு பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

தீவிரவாதிகளுடன் டேனியல் பேட்டி எடுப்பதற்கு இந்த 3 பேரும்தான் உதவி வந்தனர். அவர்கள் கொடுத்ததகவலின் அடிப்படையில்தான் ஒமர் இந்தக் கடத்தலில் தொடர்புடையவன் என்று போலீசாருக்குத் தெரிய வந்தது.

டேனியல் துப்பாக்கி முனையில் உள்ள புகைப்படத்தை ஒமர்தான் தங்களிடம் கொடுத்ததாக இந்த 3 பேரும்கூறினர்.

டேனியல் கடத்தல் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரைக் கடத்தியவர்களை வெகுவிரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று சிந்து மாகாணத்தின் உள்துறை செயலாளரான முக்தர் அகமது ஷாகூறியுள்ளார்.

டேனியலைக் கடத்தியிருப்பதாக இ-மெயிலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள்போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X