காவிரி ஆற்றை வணங்குவதில் ஒரு குழப்பம்
ஈரோடு:
காவிரி, பவானி மற்றும் அமுதா ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் பவானி கூடுதுறை பகுதியில் காவிரி ஆற்றைவழிபடுவதில் கோஷ்டிப் பூசல் நிலவுவதால் அங்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நடைபெறவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் பவானி நகரில் காவிரி ஆற்றங்கரையில் பவானி கூடுதுறை உள்ளது. இங்குதான் பவானி,காவிரி மற்றும் அமுதா ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கின்றன.
இதில் அமுதா ஆறு கண்ணுக்குத் தெரியாத ஆறு. காவிரிக்கும், பவானிக்கும் கீழே இந்த ஆறு ஓடுவதாக வரலாறுகூறுகிறது.
இந்த மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை. இங்கு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.காவிரித் தாயை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த கோவில்.
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் போதெல்லாம் கோவிலுக்கு அருகே உள்ள காவிரிக் கரையில் தடபுடலாகவிசேஷ பூஜைகள் நடத்தப்படும்.
ஆனால் சமீப காலமாக இங்கு பூஜைகள் நடத்தப்படுவது இல்லை. இதற்குக் காரணம் உள்ளூரில் உள்ளசிலருக்கிடையே யார் பூஜையை நடத்துவது என்பதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதான்.
இதனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோது பூஜை எதுவும் நடத்தப்படவில்லை. மேலும் தற்போது மேட்டூரில்அணை மூடப்பட்டு விட்டது. ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.
இதையடுத்து பவானி கூடுதுறை பகுதியில் மிகவும் குறைந்த அளவே காவிரியில் தண்ணீர் ஓடுகிறது. இதனால்அங்கு பூஜை எதுவும் நடத்தப்படாமல் கூடுதுறையே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
காவிரித் தாய்க்கு நன்றி கூறி நடத்தப்படும் பூஜையை செய்யாமல் விடுவது நல்லதல்ல என்று ஊர்ப் பெரியவர்கள்ஆதங்கப்படுகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications