வீரப்பனைச் சந்திக்க மீண்டும் காடு செல்லத் தயார்: நெடுமாறன்
பெரம்பலூர்:
வீரப்பன் சரண் அடைய வைப்பது தொடர்பாக அரசு கேட்டுக் கொண்டால் மீண்டும் காட்டுக்குச் சென்று வீரப்பனைச்சந்திக்கத் தயாராக உள்ளதாக நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கு உறுதுணையாக இருந்த தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
பெரம்பலூர் சென்றிருந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வீரப்பனை சரண் அடையவைக்க முயற்சிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு, வீரப்பன் ஏற்கனவே ஒரு முறை சரண் அடைய முன்வந்தான். அதற்கு அவன் விதித்த நிபந்தனை பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்பதுதான். அதை அரசு ஏற்றிருந்தால் அப்போதே சரண் அடைந்திருப்பான்.இப்போது கூட அரசு கேட்டுக் கொண்டால் மீண்டும் காட்டுக்குச் செல்ல நான் தயார் என்றார்.
தொடர்ந்து, இதுவரை வீரப்பனைப் பிடிக்கும் முயற்சிக்காக தமிழக, கர்நாடக அரசுகள் ரூ. 300 கோடிவரைசெலவிட்டுள்ளன. இந்தப் பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல பணிகளைச் செய்திருக்கலாம். வீரப்பன்காட்டுப் பகுதியில் உள்ள மலை வாழ் மக்களின் நலனுக்காக இதை செலவிட்டிருக்கலாம் என்றார் நெடுமாறன்.
வீரப்பன் சரண் அடைவானா என்று அவரிடம் கேட்டபோது, அது குறித்து முன்னாள் டிஜிபி தேவாரம்தான் பதில்சொல்ல வேண்டும் என்றார் நெடுமாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications