ஆண்டிப்பட்டியில் 2-வது நாளாக பன்னீர் சூறாவளி பிரச்சாரம்
தேனி:
ஆண்டிப்பட்டியில் முதல்வர் பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக நேற்று (புதன்கிழமை) சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஜெயலலிதாவுக்காக வாக்கு சேகரித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவதால் அந்தத் தொகுதி நட்சத்திரஅந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் வெற்றி உறுதியானது என்று கூறும் அதிமுகவினர், 1 லட்சம் வாக்குள்வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைப்பது என்ற வைராக்கியத்துடன் தீவிரப் பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதாவுக்காக அதிமுகவின் அனைத்து மட்ட தலைவர்களும், தொண்டர்களும் பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளனர். முதல்வர் பன்னீர்செல்வமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
முதல் நாளன்று பல்வேறு கிராமங்களுக்கு சென்ற பன்னீர்செல்வம், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முக்குலத்தோரின் கெளவரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா, முக்குலத்தோர் சமுதாய மேம்பாட்டுக்காகஅரும்பாடுபட்டு வரும் ஜெயலலிதாவின் சேவை தொடர அவரை மகத்தான வெற்றி பெற வைக்குமாறு போகும்இடமெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சாரத்தின் போது பன்னீர்செல்வம் பேசியதாவது:
திமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படஎந்த திட்டமும் வகுக்கவில்லை.
இங்கு பிரச்சாரம் செய்யும் திமுகவினர் சத்துணவுத் திட்டத்தை இந்த அரசு நிறுத்தி விடும் என்று பிரச்சாரம்செய்தனர். எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம்.
நான் பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்ற பிறகு, ஸ்டாலின் இங்கு பிரச்சாரம் செய்ய வருவார். அப்போதுமக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டு அவரை திருப்பி அனுப்புங்கள் என்று பன்னீர்கூறினார்.
முதல்வரான பின் முதல் முறையாக இந்தப் பகுதிகளுக்கு பன்னீர்செல்வம் வருவதால் ஏராளமான மக்கள் திரண்டுவந்து அவரது பேச்சைக் கேட்டனர். இன்றுடன் அவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.
பின்னர் வரும் 13ம் தேதி முதல் ஜெயலலிதா இங்கு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications