அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம் லீக் கடும் எதிர்ப்பு
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பினர் எடுக்கும் எந்த ஒருமுயற்சியையும் எதிர்ப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று (வியாழக்கிழமை) கூறியுள்ளது.
அயோத்தியில் வரும் மார்ச் 12ம் தேதி ராமர் கோவிலை எப்படியும் கட்டியே தீருவது என்று வி.எச்.பி.முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசு இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்காக நாங்கள் பாஜக அரசைக் கூடதியாகம் செய்யத் தயாராக உள்ளோம் என்றும் வி.எச்.பி. அமைப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்தியா முழுவதும் வி.எச்.பி. அமைப்பினர் ஆதரவு கோரி வருகின்றனர்.பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களை அவர்கள் நேரடியாகச் சந்தித்து வருகின்றனர்.
வி.எச்.பி. தலைவரான அசோக் சிங்கால்கூட நேற்று காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரிய சுவாமிகளைச் சந்தித்துஇதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் ராமர் கோவிலை கட்டுவதற்காக வி.எச்.பி. அமைப்பினர் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியையும்எதிர்ப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று கூறியுள்ளது.
சென்னையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் ஜி.எம். பனதவாலாவும் அதன் தமிழகப் பிரிவின்தலைவர் கே.எம். காதர் முகைதீனும் கூட்டாக இதுகுறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் வி.எச்.பியின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்குத் தந்தி அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் அவ்வறிக்கையில் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
வி.எச்.பி. விரித்துள்ள வலையில் மத்திய அரசு வீழ்ந்துவிடக் கூடாது என்றும் அவ்வறிக்கையில் முஸ்லீம் லீக்தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications