நிருபரை நாங்கள் கடத்தவில்லை: ஜெய்ஷ்-ஏ-முகமது
முஷாபராபாத்:
அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதுஎன்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-ஏ-முகமது மறுத்துள்ளது.
ஆனால் அவர்களுடைய மிரட்டலுக்குப் பணிய அமெரிக்கா மறுத்ததையடுத்து, டேனியலைப் பற்றிய விவரம்எதுவும் தெரியவில்லை. அந்தத் தீவிரவாதிகளும் அதன்பிறகு தகவல் எதுவும் அனுப்பவில்லை.
இதற்கிடையே டேனியல் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகள்,ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவனான ஷேக் ஒமர்தான் தங்களிடம் அந்தப் புகைப்படத்தைக்கொடுத்ததாகக் கூறினர்.
கடந்த 1999ல் இந்திய விமானத்தை காண்டஹாருக்குக் கடத்தியதன் மூலம் இந்தியாவால் விடுதலைசெய்யப்பட்டவர்களின் ஒருவன்தான் ஒமர். விடுதலை செய்யப்பட்டவுடன் இவன் ஜெய்ஷ் அமைப்பில் சேர்ந்தான்.இவன்தான் தற்போது டேனியலைக் கடத்தியவர்களில் முக்கியக் குற்றவாளி.
இதையடுத்து அந்தத் தீவிரவாதிகளிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டேனியல் கடத்தப்பட்டதில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஜெய்ஷ்அமைப்பினர் கூறியுள்ளனர்.
இந்தக் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 3 தீவிரவாதிகளைக்கூட தங்களுக்குத் தெரியாது என்றுஜெய்ஷ் அமைப்பினர் தெரிவித்தனர். தங்கள் அமைப்பில் ஒமர் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
எங்களுடைய ஒரே இலக்கு காஷ்மீர்தான். இந்நேரத்தில் கடத்தல் போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களில்தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஜெய்ஷ் அமைப்பினர் கூறியது வேடிக்கையாக இருந்தது.












Click it and Unblock the Notifications