சதாசிவம் கமிஷன்: அதிரடிப்படை கோரிக்கை நிராகரிப்பு
சென்னை:
வீரப்பனைத் தேடும் பணியின்போது கிராம மக்களை துன்புறுத்தியதாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்கநியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் கமிஷன் விசாரணையில் அதிரடிப்படை போலீசார் வக்கீல்களை உதவிக்கு வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது மலைவாழ் மக்களை பல்வேறு விதங்களில் துன்புறுத்தியதாக தமிழகமற்றும் கர்நாடக அதிரடிப்படை போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக நீதிபதி சதாசிவம் தலைமையிலான கமிஷனை சிேய மனித உரிமை ஆணையம்நியமித்தது.
சதாசிவம் கமிஷன் விசாரணைக்கு தமிழக அதிரடிப்படை போலீசார் கோர்ட் மூலம் இடைக்கால தடைவாங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்தத் தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து கமிஷன் விசாரணை மீண்டும் துவங்கியுள்ளது. மாதேஸ்வரன் மலைப் பகுதியில் விசாரணைதொடங்கியுள்ளது.
கமிஷன் நேற்று (புதன்கிழமை) கூடியபோது, தமிழக அதிரடிப்படை சார்பில் டி.எஸ்.பி. சின்னமலை, இன்ஸ்பெக்டர்ராமலிங்கம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதில் விசாரணையின்போது தங்கள் சார்பில் வாதாட வக்கீல்களைவைத்துக் கொள்ள அனுமதி கேட்டனர்.
ஆனால் இதை நீதிபதி சதாசிவம் நிராகரித்து விட்டார். அவர் கூறுகையில், இது கோர்ட் அல்ல, எந்தவிதமானசட்டத்தின் கீழும் இது அமைக்கப்படவில்லை.
தேசிய மனித உரிமை கமிஷனால் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள்,பிரதிவாதங்களை கேட்டறிந்து அவற்றை தேசிய மனித உரிமை கமிஷனிடம் கொடுக்க வேண்டியதே எங்களதுபணி. எனவே இங்கு வக்கீல்களை வைத்துக் கொண்டு வாதாட அனுமதிக்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, அதிரடிப்படை போலீசாரானாலும் சரி யாருக்குமே வக்கீல் வைத்துக் கொள்ளஅனுமதி கிடையாது என்றார் அவர்.
இதேபோல, விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய கர்நாடக போலீசாரின் கோரிக்கையையும்நீதிபதி சதாசிவம் நிராகரித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications