அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்
சென்னை:
அரசு ஊழியர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால்,இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
பண்டிகை முன் பணம், போனஸ் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்இன்று முதல் காலவரையறையின்றி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
நேற்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை சென்னை கோட்டையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர்பொன்னையன், தலைமைசெயலாளர் சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள்கலந்து கொண்டனர்.
அரசின் நிதி நிலைமை சீரான பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பண்டிகை முன் பணம் வழங்கவும் அரசு ஒப்புக் கொண்டது.
இந்த ஒப்புதல்கள் அனைத்தையும் அரசிடமிருந்து எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்ட பின்னர், ஸ்டிரைக் வாபஸ்பெறப்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications