காஷ்மீரில் மசூதிக்குள் தீவிரவாதிகள்: பொது மக்களை சிறை பிடித்தனர்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் அவர்களிடம்இருந்து தப்பி அருகில் உள்ள மசூதியில் தஞ்சம் புகுந்தனர்.
இவர்களை சரணடைய வைக்க பேச்சு நடத்த நடுவர்களாக சென்ற பொது மக்களில் சிலரை மற்ற இருதீவிரவாதிகளும் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் குப்வாரா மாவட்டத்தில் துடிகுண்ட் என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மறைந்திருந்த 3 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடிக்கமுயன்றனர். ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து படையினரும் சுட்டனர்.
இதையடுத்து அந்தத் தீவிரவாதிகள் அருகில் உள்ள மசூதியில் புகுந்து கொண்டு அங்கிருந்தவண்ணம் படையினரைநோக்கி சுட்டனர்.
ஆனால், எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தவில்லை. பதிலாக பள்ளிவாசலை சுற்றிவளைத்துள்ளனர். உடனடியாக கூடுதல் ராணுவப் படைகளும், எல்லைப் பாதுகாப்புப் படைகளும் விரைந்துள்ளன.
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும்படி ஒலிப் பெருக்கியில் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
மசூதிக்குள் மின் சப்ளையையும், குடிநீர் சப்ளையையும் ராணுவத்தினர் துண்டித்துள்ளனர்.
இதையும் மீறி பாதுகாப்புப் படையினரை நோக்கி அந்தக் கும்பல் அவ்வப்போது சுட்டவண்ணம் இருந்தனர்.இதையடுத்து ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இதில் ஒரு தீவிரவாதி இறந்தான்.
மற்ற இருவரையும் சரணடைய வைக்க பொது மக்களில் சிலரை ராணுவ அதிகாரிகள் மசூதிக்குள் அனுப்பினர்.ஆனால், இந்த இருவரும் தங்களிடம் பேச்சு நடத்த வந்த பொது மக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகின்றனர்.
மாலை வரை இந்தத் தீவிரவாதிகள் சரணடையவில்லை.
காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் இது போன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகர் பாராமுல்லா மாவட்டத்தில் டார்ஸூ கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர்மசூதிக்குள் புகுந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications