அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் வேண்டும்: இந்தியா
டெல்லி:
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்க இந்தியா விரும்புகிறது பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
அமெரிக்காவிடம் இருந்து நாங்கள் வாங்க விரும்பும் ஆயுதங்கள் பிற நாடுகளிடம் இருக்கக் கூடாது என்றுநினைக்கிறோம். பிற நாடுகள் அதைத் தயாரிக்கக் கூட நெடுநாட்கள் ஆக வேண்டும். அது போன்ற நவீனஆயுதங்கள் தான் இந்தியாவுக்கு வேண்டும்.
சமீப காலமாக இந்தியா- அமெரிக்கா இடையே பாதுகாப்புரீதியில் நட்புறவு பலப்பட்டு வருகிறது. இந்திய-அமெரிக்க ராணுவங்களும் விமானப் படைகளும் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
முன்பும் இந்தியா- அமெரிக்க இடையே பாதுகாப்புரீதியில் ஒப்பந்தம் இருந்தது. ஆனால், பனிப் போர் காலத்தில்அந்த உறவு சீர்குலைந்தது. அதே போல 1971ம் ஆண்டு இந்தியாவுடன் பாகிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்தபோதுதனது கடற்படையை பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க அனுப்பியது. இதனால் உறவு முழுமையாகசீர்குலைந்தது.
பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது இந்திய- அமெரிக்க உறவு முழு அளவில் கெட்டுப்போனது.
ஆனால், தீவிரவாதிகள் தாக்குதலையடுத்துத் தான் உலக நாடுகள் குறித்த தனது கண்ணோட்டத்தை அமெரிக்காமாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டுவிட்டது அமெரிக்கா.
இந்திய விமானப் படைக்கு போர் பயிற்சி விமானங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.இந்த விஷயத்தில் எனக்கு எரிச்சல் தான மிஞ்சியது. பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விமானங்களை விற்க பல நாடுகள் முன் வந்துள்ளன. அதே நேரத்தில் அந்த விமானத்தை வாங்க வேண்டாம், இந்தவிமானத்தை வாங்க வேண்டாம் என சில நாடுகளில் இருந்து அடையாளம் தெரியாத சிலரிடம் இருந்தும்கடிதங்கள் வந்து கொண்டுள்ளன.
இந்தியாவுக்கு நவீன விமானங்கள் கிடைக்கக் கூடாது என சில எதிரி நாடுகள் திட்டமிட்டு இந்த விஷயத்தில் புகுந்துவிளையாடி வருகின்றன. பழைய விமானங்களில் பயிற்சி மேற்கொண்டு அவை விபத்துக்குள்ளாகி நமது இளம்விமானிகள் பயிற்சியின்போதே சாக வேண்டும் என அந்த நாடுகள் நினைக்கின்றன என்றார் பெர்னாண்டஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications