கொல்கத்தா தாக்குதல்: அன்சாரிக்கு 7 நாள் சிபிஐ காவல்
டெல்லி:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையம் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் அன்சாரியை7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் உத்தரவிட்டது.
அமெரிக்க மையம் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அப்சாரியை நேற்று துபாய் போலீசார் சி.பி.ஐயிடம்ஒப்படைத்தனர். பின்னர் விமானம் மூலம் இவன் நேற்றிரவு டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டான்.
இந்நிலையில் இன்று பிற்பகல் டெல்லி பெருநகர நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அன்சாரிகொண்டுவரப்பட்டு நீதிபதி காமினி லா முன் நிறுத்தப்பட்டான்.
விசாரணையின் முடிவில், சி.பி.ஐ. போலீசாரின் வேண்டுகோளுக்கிணங்க அன்சாரியை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில்வைக்க நீதிபதி காமினி உத்தரவிட்டார்.
விசாரணைக்காக அன்சாரியை குஜராத்துக்குக் கொண்டு செல்லவும் நீதிபதி காமினி அனுமதி அளித்தார்.
கடந்த ஆண்டு குஜராத்திலும் ஹரியானாவிலும் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தியதில் அன்சாரிக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும், இது தொடர்பாகஅவனை விசாரிக்கவே சி.பி.ஐ. போலீசார் அவனை குஜராத் கொண்டு செல்கின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் அன்சாரியை குஜராத்தில் உள்ள ரதம்பூர் மாஜிஸ்திரேட் முன்பாக வரும் 16ம் தேதி மாலை4 மணிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி காமினி உத்தரவிட்டார்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் அன்சாரியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
குஜராத்தில் அவனிடம் சி.பி.ஐ. விசாரணை முடிந்த பிறகே, கொல்கத்தா போலீசாரிடம் அன்சாரி ஒப்படைக்கப்படஉள்ளான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications