ராமேஸ்வரம் கோவிலில் ஜோதிலிங்கம் கண்டெடுப்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் உள்ள ஏகாந்தரமார் கோவிலில் ஸ்படிக வகையைச் சேர்ந்த ஜோதி லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஏகாந்தரமார் கோவில் 600 ஆண்டுகள் பழமையானது.இந்தக் கோவிலைச் சுற்றிலும் அமிர்தவாமி, பாபவிமோசனம் ஆகிய 5 தீர்த்தங்கள் உள்ளன.
பாபவிமோசன தீர்த்தத்துக்கு அருகில் இருந்த வில்வ மரத்திற்கு கீழே அக்னி உருவமாய் ஜோதி லிங்கமும்இருந்தது. இந்த லிங்கத்தை பக்தர்கள் வணங்கி வந்தனர். இந்த வில்வமரம் 100 ஆண்டுகளுக்கு முன் வேரோடுசாய்ந்து விட்டது.
ரயில் பாதை அமைப்புக்குப் பிறகு ராமேஸ்வரம் முக்கியத்துவம் பெற்றதால் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்எண்ணிக்கை குறைந்தது. இதனால் இந்தக் கோவில் பராமரிப்பு இல்லாமல் போனது.
கடந்க ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த கோவில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலில்சேதமடைந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவில் பிரகாரத்தின் முற்புதர்களில் இருந்து ஜோதிலிங்கம் ஆராய்ச்சியாளர்களால்கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லிங்கம் பீடமில்லாமல் 80 செ.மீ. உயரமும், 60 செ.மீ. சுற்றளவும் கொண்டது.
தற்போது இந்த லிங்கம் கோவில் பிரகாரத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. கற்பூர ஆரத்தி காட்டினால் ஏற்படும்ஒளியை இந்த லிங்கம் உள்வாங்கி எட்டு கோணங்களில் பிரதிபலித்து பிராகசமாய் ஜொலிக்கிறது.
100 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள இந்த ஜோதி லிங்கத்தை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என்று கூட்டமாகவந்து வழிபடுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications