சேலத்தில் பட்டப் பகலில் மருத்துவமனையிலிருந்து தப்பிய இலங்கை கைதி
சேலம்:
சேலத்தில் காவலுக்கு இருந்த போலீசைக் கத்தியால் குத்திவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஇலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டப்பகலில் தப்பியோடிவிட்டான்.
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ப்ளாலுதீன் என்ற முகமது சித்திக் (30) கடந்த ஆண்டு போதைப்பொருள்களைக் கடத்தும்போது, போலீசாரிடம் பிடிபட்டான்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்தமுயன்றபோதுதான் போதைப் பொருள் தடுப்பு போலீசாரிடம் சித்திக் மாட்டிக் கொண்டான்.
சித்திக்குக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் தனக்கு குடல் இறக்க நோய் இருப்பதாகக் கூறிய சித்திக், இதற்காகச் சிகிச்சையளிக்க அனுமதி கோரிமனு செய்தான். மனிதாபிமான அடிப்படையில் அவனுடைய மனு ஏற்கப்பட்டு, கடந்த 5ம் தேதி சேலம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
சித்திக்கைப் பாதுகாப்பும் பொறுப்பு சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் கான்ஸ்டபிளான ராமலிங்கத்திடம்ஒப்படைக்கப்பட்டது.
சித்திக் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மருத்துவமனையில் உள்ள "ஸ்டிராங்" அறையில் ஏற்கனவே 4 கைதிகள்சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் சிகிச்சை பெறும் கைதிகளுக்கு உணவு கொண்டுவரப்பட்டது.அதற்கு முன்னதாகவே "ஸ்டிராங்" அறைக்கு எதிரே அவனுடைய கூட்டாளிகள் ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பயங்கரஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர்.
அவர்களிடமிருந்து சிக்னல் கிடைத்ததும், கான்ஸ்டபிள் ராமலிங்கத்தைக் கத்தியால் குத்தி கீழே தள்ளிவிட்டுகூட்டாளிகளை நோக்கி ஓடினான் சித்திக்.
அவன் தங்கள் அருகில் வந்தவுடன் அவனுடைய கூட்டாளிகள் துப்பாக்கி, பிஸ்டல் ஆகியவற்றால் போலீசாரைநோக்கிச் சராமாரியாகச் சுட்டனர். ஆனால் போலீசாரைக் குண்டுகள் தாக்கவில்லை.
பின்னர் சித்திக்கும் அவனுடைய கூட்டாளிகளும் மருத்துவமனை சுவரில் ஏறி வெளிப்புறம் குதித்தனர். அங்குஅவர்களுக்காகத் தயாராக நின்ற டாடா சுமோ காரில் ஏறிப் பறந்து விட்டனர்.
சித்திக்கையும் அவனுடைய கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சேலத்தைச் சுற்றியஅனைத்துப் பாதைகளிலும் வரும் வாகனங்களைப் போலீசார் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தன் கூட்டாளிகளுடன் சித்திக் தப்பியோடியபோது ஒரு செல்போனைத் தவறவிட்டுச் சென்றுள்ளனர்.அந்த செல்போனைக் கைப்பற்றிய போலீசார் அதன் எண்ணுக்குரியவரைக் கண்டுபிடிக்கும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications