20 தீவிரவாதிகளை ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்
டெல்லி:
20 தீவிரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா மீண்டும்வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட 20 தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு அந்த 20 தீவிரவாதிகளையும் தங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பட்டியலை அனுப்பியது.
ஆனால் இதுவரை பாகிஸ்தான் இந்த 20 தீவிரவாதிகளையும் ஒப்படைப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும்மேற்கொள்ளவில்லை.
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தாக்குதல் நடந்தது தொடர்பாக அப்தாப் அன்சாரி என்றதீவிரவாதியை கடந்த சனிக்கிழமை இந்தியாவின் சி.பி.ஐயிடம் துபாய் ஒப்படைத்தது.
அதே முறையைப் பின்பற்றி இந்த 20 தீவிரவாதிகளையும் உடனடியாக ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியாதற்போது வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரான ஜலால் அப்பாஸ் ஜிலானி நேற்று (திங்கள்கிழமை)வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டார்.
அப்போது அந்த 20 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று ஜிலானியிடம்வலியுறுத்தப்பட்டது.
தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்போ அடைக்கலமோ அளிக்கக் கூடாது என்று சர்வதேசச் சட்டம் தெளிவாகக் கூறியும்பாகிஸ்தான் அதை மதிக்காமல் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ்பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications