இலங்கையில் போர்நிறுத்தம்: குறைந்து வரும் சிக்கல்கள்
கொழும்பு:
இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தம் வேண்டி தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மேலும் சில மாறுதல்கள் செய்யவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்துடன் இதுகுறித்துவிவாதிப்பதற்காக நார்வே தூதுக் குழுவினர் மீண்டும் லண்டன் விரைந்துள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலைப்புலிகள் தங்களுடைய இறுதியான நிலையைத் தெளிவாக நார்வேகுழுவினரிடம் தெரிவித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளுடன் பேசிய பிறகு நார்வே குழுவினர் மீண்டும் கொழும்புவுக்கு வந்து, இலங்கை அரசிடம்விவாதிக்க உள்ளனர். அதன்பிறகே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கையெழுத்துப் போட்டால்தான்தானும் கையெழுத்திடப் போவதாக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த வாரம்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவமும் அறிவித்த 2 மாத காலப் போர்நிறுத்தம் வரும் 24ம்தேதியுடன் முடிவடைகிறது.
அதற்கு முன்னதாகவே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று விடுதலைப்புலிகளும்நார்வே குழுவினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை அதற்குள் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், வரும் 24ம் தேதிநள்ளிரவிலிருந்து மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் நீடிப்பார்களா என்பது குறித்து இன்னும்எதுவும் தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications